தேர்தலுக்கான பிரசார களத்தில் இறங்கியுள்ள தம்மிக்க!

#SriLanka #Election #President
PriyaRam
1 year ago
தேர்தலுக்கான பிரசார களத்தில் இறங்கியுள்ள தம்மிக்க!

இலங்கை வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொதுமக்களை இணைந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஞாயிறு பத்திரிகை ஒன்றில் விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான Ballys International Holdings நிறுவனத்தினால் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

images/content-image/2023/12/1703483636.jpg

இதில் தம்மிக்க பெரேராவின் பெயரும் இருப்பதாக கூறப்பட்டது. பொதுஜன பெரமுனவுக்குள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, "ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக பெரேராவும் பொருத்தமான வேட்பாளராக இருப்பார். 

நான்கிற்கும் அதிகமான ஜனாதிபதி வேட்பாளர்கள் உள்ளனர். தம்மிக்க பெரேராவும் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. 

எமது கட்சியில் அவர் போட்டியிடுவது குறித்து எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. அவர் தேர்தலில் போட்டியிட்டால் சிறந்த ஒரு வேட்பாளர்தான்" என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!