ஏன் செவ்வாய்க்கிழமையை மக்கள் தவிர்க்கின்றார்கள்!

#Lanka4 #Vedische #Astrologie #Beratung #Partnerhoroskop #analyse #Lebensberatung #Suthakar #Parameswaran #cittarastro.ch #Zukunft
Dhushanthini K
4 months ago
ஏன் செவ்வாய்க்கிழமையை மக்கள் தவிர்க்கின்றார்கள்!

சிசேரியன் மற்றும் அறுவைச்சிகிச்சை போன்றவற்றிற்கான நாட்களை தெரிவு செய்யும் பொழுது செவ்வாய்க்கிழமைகள் தவிர்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில் செவ்வாயின் இலக்கத்தில் வரக்கூடிய 9 18 27 போன்ற திகதிகளை தவிர்த்தல் மிகச்சிறந்தது. 

பொதுவாகவே செவ்வாய் போருக்கு காரகன் என்பார்கள் ஏனென்றால் அது துரிதமாக செயல்படக்கூடியது. மற்றது மிகவும் வலிமையானது அதேவேளை இரத்தத்துக்கும் காயங்கள் விபத்துக்கள் போன்றவற்றிற்கும் தொடர்புடையது. 

 இந்தச் செவ்வாய்க்கிழமைகளில் அறுவை சிகிச்சைகளை செய்யும் பொழுது இரத்தப்போக்கு கூடுதலாகவும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகளும் அதிகமாகவே இருக்கும் ஆகவே இவைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. 

பொதுவாக மருந்து உண்ணுதல் என்றாலே சோதிடம் அதற்கு பல விதிகளையும் வழிமுறைகளையும் வகுத்துள்ளது. நட்சத்திரம் திதி வாரம் போன்றவை. (ஞாயிற்றுக்கிழமை சூரியனுடைய நாள் என்பதால் ஞாயிறு நோயறு, ஞாயிற்றுக்கிழமைகளில் மருந்து உண்ணல் சிறப்பு) என்னைப் பொறுத்தவரையில் செவ்வாய்க்கிழமைகளில் நோய்க்காக மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம் ஒரு வகையில் அதுவும் ஒரு போர் தான்.  

நீங்கள் செவ்வாய்க்கிழமைகளில் என்ன ஒரு வேலையை செய்தாலும் அது விரைவு படுத்தப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் செவ்வாய் சுறுசுறுப்பானவர் கோபக்காரர் மற்றும் வீரம் மிக்கவர். 

 வடநாட்டில் செவ்வாய் மங்கலகரமான நாளாக பார்க்கப்படுவதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

தகவல் : திரு.சோதிடர் சுதாகர், சுவிஸ்,

images/content-image/1703427537.jpg

images/content-image/1703427580.jpg