ரிஷப ராசியினருக்கு கவனக் குறைவால் நெருக்கடி உருவாகும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
4 months ago
ரிஷப ராசியினருக்கு கவனக் குறைவால் நெருக்கடி உருவாகும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். பண வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பரணி: உங்கள் செயல் லாபமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் உண்டான பிரச்னை நீங்கும். கார்த்திகை 1: செயல்களில் சங்கடம் உண்டானாலும் போராடி வெற்றி பெறுவீர். கோயில் வழிபாடு திருப்தி தரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்பாராத சங்கடம் தோன்றும். முயற்சி இழுபறியாகும். புதிய முயற்சியை தள்ளிப் போடுவது நல்லது. ரோகிணி: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். மனம் மகிழும் பொழுது அமையும். மிருகசீரிடம் 1,2: உங்கள் கவனக் குறைவால் வியாபாரத்தில், தொழிலில் நெருக்கடி தோன்றும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகளை சந்திப்பீர். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. திருவாதிரை: புதிய சிந்தனை மேலோங்கும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த பலன் உண்டாகும். புனர்பூசம் 1,2,3: உடல் நிலையில் இருந்த பிரச்னை விலகும். போட்டியாளர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

கடகம்

புனர்பூசம் 4: முயற்சியில் வேகம் உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் செயலில் போராடி லாபம் காண்பீர்கள். பூசம்: வியாபாரத்தில் புதிய யுக்தியைக் கையாள்வீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆயில்யம்: கடன் கொடுத்தவர் தேடி வருவர். விஐபிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில இருந்த தடை விலகும். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். பூரம்: நேற்றைய விருப்பம் இன்று நிறைவேறும். செயல்களில் நன்மைகளைக் காண்பீர். உத்திரம் 1: மனதில் குழப்பம் அதிகரிக்கும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: நேற்று வரை இருந்த சங்கடம் விலகும். தடை பட்டிருந்த வருவாய் வரும். அஸ்தம்: நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். நண்பர்களால் லாபம் காண்பீர். சித்திரை 1,2: குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்படுவீர். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். 

துலாம்

சித்திரை 3,4: உங்கள் செயல்களில் எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். வாகனத்தை இயக்குவதில் கவனம் தேவை. சுவாதி: பிரச்னை ஒன்று மீண்டும் உருவெடுக்கும். மனதில் தேவையற்ற பயம் தோன்றும். விசாகம் 1,2,3: மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்ப உறவுகளுடன் உண்டான பிரச்னை நீங்கும். 

விருச்சிகம்

விசாகம் 4: வழக்கத்தை விட உங்கள் மனதில் தைரியம் அதிகரிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அனுஷம்: வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர். வருவாய் அதிகரிக்கும். கேட்டை: நீண்டநாள் திட்டம் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். 

தனுசு

மூலம்: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். மறைமுகத் தொல்லை விலகும். நட்புகளால் லாபம் உண்டாகும். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். செயல் லாபமாகும். ஆரோக்கியம் சீராகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் மனம் ஓய்வை விரும்பினாலும் அவசர வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். திருவோணம்: முயற்சியில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் உண்டான சங்கடம் நீங்கும். அவிட்டம் 1,2: குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர். நினைத்தவற்றில் வெற்றி அடைவீர். 

கும்பம்

அவிட்டம் 3,4: உழைப்பு அதிகரிக்கும். மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். சதயம்: எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் விருப்பம்போல் செலவு செய்வீர். எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் இன்று இழுபறி நிலை உண்டாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

மீனம்:

பூரட்டாதி 4: உங்கள் எண்ணத்திற்கு மாறாக குடும்பத்தினர் செயல்படுவர். வருமானம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: உங்கள் ரகசியம் வெளிப்படும். புதிய நண்பர்களால் சில சங்கடங்களை சந்திப்பீர். ரேவதி: துணிச்சலுடன் செயல்பட்டாலும் உங்கள் முயற்சி லாபம் தராமல் போகும். வேலை பளு அதிகரிக்கும்.