நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை : 2008 பேர் கைது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை : 2008 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 185 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 33 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மேலும் 209 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 228 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நடவடிக்கையில் 2 கிலோ 400 கிராம் ஹெரோயின், 1 கிலோ 200 கிராம் ஐஸ், 12 கிலோ 200 கிராம் கஞ்சா, 5 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 17,054 மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4