அடையாள அட்டைக்காக எடுக்கப்படும் புகைப்படங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அடையாள அட்டைக்காக எடுக்கப்படும் புகைப்படங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் நகல் எடுக்க பதிவு செய்த புகைப்படக் கலைஞரால் விதிக்கப்படும் அதிகபட்ச கட்டணம்  400 ரூபாவாக  உயர்த்தப்பட்டுள்ளது.  

இதன்படி, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச் செய்யப்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சு அசாதாரண வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. 

இதற்கு முன்பு அதிகபட்சமாக 150 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகலைப் பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆன்லைன் அமைப்பு மூலம் ஆட்கள் பதிவுத் துறைக்கு அனுப்ப வேண்டும்.  

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன் கீழ், புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும், பின்னர் படிப்படியாக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!