மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவராக ஜனதா தர்மகீர்த்தி நியமனம்!
#Mahinda Amaraweera
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மில்கோ கம்பனி லிமிடெட்டின் புதிய தலைவராக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனதா தர்மகீர்த்தியை நியமிக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக, அமைச்சர் ஜானக தர்மகீர்த்திக்கு இந்த தலைவர் பதவிக்கான கடமைகளையும் ஒதுக்கியுள்ளார்.
அவர் இன்று (18.12) தனது கடமைகளை பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஊழியர்களின் அதிருப்தி அதிகரிப்பு மற்றும் மில்கோ நிறுவனத்தின் உற்பத்தி குறைவு என்பனவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நியமனம் வழங்கப்படுவதாகவும் புதிய தலைவரை நியமிக்கும் கடிதத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.