ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவிக்கு எழுந்துள்ள போட்டி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சுதந்திர ஜனதா சபையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு பிரதித் தலைமைத்துவத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதுடன், அங்கு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய கூட்டணியின் பிரதித் தலைமைத்துவத்தை கட்சியின் மூத்த தலைவர்களான ரஞ்சித் மத்தும்பண்டார அல்லது லக்ஷ்மன் கிரில்ல போன்றவர்களுக்கே வழங்கப்பட வேண்டுமென அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.