முல்லைத்தீவுவில் வான் பாயும் முத்தையன்கட்டு குளம்! மக்களை அவதானமாக இருக்க கோரிக்கை

#SriLanka #weather #Mullaitivu #Disaster
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவுவில் வான் பாயும் முத்தையன்கட்டு குளம்! மக்களை அவதானமாக இருக்க கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்துஐயன்கட்டு குள்ளத்திற்கான நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில், குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (16) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

 24 அடி கொள்ளளவு கொண்ட முத்துஐயன்கட்டுக்குளத்தில் 23 அடி 3 அங்குல நீர்மட்டம் காணப்படுகிறது.

 நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இரண்டு வான் கதவுகள் ஆறு அங்குலத்துக்கும் இரண்டு வான் கதவுகள் மூன்று அங்குலத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளன.

images/content-image/2023/1702723074.jpg

 இன்றைய தினம் காலை முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் மஞ்சுளா ஜொய்ஸ்குமார் அழைப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளம்பலம் உமா மகேஸ்வரன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி, மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் நவரட்ணம் சுதாகரன், ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் இ.றமேஸ், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு வான் கதவுகளை திறந்து வைத்தனர். 

 இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் காணப்படுவதாகவும் அனைத்து குளங்களும் அதன் உச்ச கொள்ளளவை அடைந்துள்ளதாகவும் எனவே தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!