பாராளுமன்றம் விசேடமாக இன்று கூடுகிறது!
விசேட பாராளுமன்ற நாளாக இன்று (10.12) 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு குறித்து விவாதம் செய்வதற்காக பாராளுமன்றம் இன்று கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காலை 09.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை விவாதம் நடைபெற உள்ளது. இன்று விவாதிக்கப்படவுள்ள வரி திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் தற்போது விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத VAT 18 சதவீதமாக அதிகரிக்கவுள்ளது.
இதன்படி, முன்னர் VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட விவசாய இயந்திரங்கள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இதர உபகரணங்களுக்கு VAT விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பயிரிடப்படும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், அதிக புரதம் மற்றும் "ஊட்டச்சத்து" வகையைச் சேர்ந்த அதிக ஆற்றல் கொண்ட விவசாய உணவுப் பொருட்களும் VATக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ்கள், பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவையும் இதே வரிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.