மீண்டும் சேவைகளை ஆரம்பித்த சென்னை விமான நிலையம்

#India #Flight #Airport #Rain #Flood #Tamilnews #Strom #cancelled
Prasu
2 years ago
மீண்டும் சேவைகளை ஆரம்பித்த சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை விமான நிலையம் நீரில் மூழ்கிய நிலையில் நேற்று (4) மூடப்பட்டது. விமான ஓடுபாதையில் இரண்டு அடி அளவிற்கு வெள்ள நீர் தேங்கியதால் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது .

அதன்பின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மழையின் தாக்கம் குறையாததால் இன்று காலை வரை விமான நிலையத்தின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மழை வெள்ளம் குறைவடைய ஆரம்பித்துள்ளது. சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் நகர்ந்து ஆந்திராவுக்குள் நுழைந்துவிட்டதாகவும் , ஆந்திராவில் இன்று மிக்ஜாம் புயல் கரையை கடக்க உள்ளதாகவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் காலை 9 மணியிலிருந்து சென்னை விமான நிலையத்தின் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. விமான சேவை ஆரம்பிக்கப்பட்டாலும் ,குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்படுகின்றன .

 மேலும், சென்னைக்கு வர வேண்டிய 88 விமானங்களும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 89 விமானங்களுமாக மொத்தம் 177 விமான சேவைகள் இன்று இரத்து செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4