22 லட்சம் பெறுமதியான இனிப்புகளை திருடிய பெண்

#Police #Australia #Women #world_news #Robbery #Sweets #vehicle
Prasu
2 years ago
22 லட்சம் பெறுமதியான இனிப்புகளை திருடிய பெண்

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி உள்ளது.

இந்நிலையில், நியூ சவுத்வேல்சில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் இருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் டோனட்ஸ் அடங்கிய கிரீம் வகை இனிப்புகள் ஒரு வேனில் ஏற்றப்பட்டு டெலிவரிக்காக கொண்டு செல்லப்பட்டது.

அப்போது பெட்ரோல் நிலையத்தில் டிரைவர் வேனை நிறுத்திய போது, டிரைவரை தாக்கி இனிப்புகளுடன் வேனை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். 

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். 

அப்போது வேனை திருடியது ஒரு பெண் என தெரிய வந்துள்ளது. அதன்மூலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4