கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை அமைச்சர் பதவி நீக்கம்

#America #world_news #government #Minister #Kailasa #sacked #Paraguay #Deal
Prasu
1 year ago
கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை அமைச்சர் பதவி நீக்கம்

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த தென் அமெரிக்க நாடான பராகுவேவின் வேளாண் துறை அமைச்சர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஆன்மீக குருவான நித்தியானந்தாவின் ஆச்சிரம பீடங்கள் தமிழ்நாட்டின் பல இடங்கள் மாத்திரமன்றி உலகம் முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய நித்தியானந்தா கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் தலைமறைவானார். பின்னர் அதே ஆண்டு டிசம்பரில் கைலாசா என்ற பெயரில் புதிய நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். 

கைலாசாவிற்கான தனிக்கொடி, கடவுச்சீட்டு மற்றும் பணம் என்பவற்றை உருவாக்கினார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ஐ.நா. சபை கூட்டத்தில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் சிலர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது அமெரிக்காவின் 30 நகரங்கள், பிரான்ஸ், கினீ நாடுகளின் நகரங்களுடன் ‘சிஸ்டர் சிட்டி' ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கைலாசாவின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர் தென் அமெரிக்க நாடான பராகுவேவின் வேளாண் துறை மற்றும் கைலாசா இடையே கடந்த அக்டோபர் 16ஆம் திகதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுதொடர்பாக கைலாசாவின் இணையதளம், சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், ஒப்பந்த நகல்கள் வெளியிடப்பட்டன. பராகுவே பாராளுமன்றிலும் கைலாசா விவகாரம் எழுப்பப்பட்டது. 

பராகுவே அரசின் விசாரணைகளையடுத்து கற்பனை தேசத்துடன் வேளாண் துறை அமைச்சர் ஒப்பந்தம் செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பராகுவேவின் வேளாண் துறை அமைச்சர் அர்னால்டோ சாமோரா நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

 இதுதொடர்பில் "கைலாசா நாட்டை சேர்ந்த 2 பிரதிநிதிகள் என்னை சந்தித்தனர். எங்கள் நாட்டுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தனர். பல்வேறு திட்டங்களை முன்வைத்தனர். அவர்களை நம்பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்." என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!