சுவர் இடிந்து வீழ்ந்து 19 வயது இளைஞர் உயிரிழப்பு
#SriLanka
#Death
#Attack
#Elephant
#sri lanka tamil news
#Building
Prasu
2 years ago
சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இளைஞர்கள் குழுவுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில் அது இடிந்து வீழ்ந்து 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சீகிரிய கிபிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த அவிந்த இஷான் சமரநாயக்க என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இவர் சிகிரியா பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி பெறுபவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
நெல்லை உண்ண வந்த காட்டு யானை அதனை உட்கொண்டு விட்டு இளைஞர்கள் உறங்கிக் கொண்டிருந்த வீட்டின் சுவரை சேதப்படுத்தியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.