16 வயதுடைய மாணவியை முத்தமிட்ட இளைஞன் கைது
#SriLanka
#School
#Arrest
#Student
#Sexual Abuse
#Girl
#Puththalam
#kiss
Prasu
2 years ago
16 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவரை வனாத்தவில்லுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். எழுவன்குளம் - ரால்மடுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் தனது கையை பிடித்து இழுத்து முகத்தில் முத்தமிட்டதாக குறித்த மாணவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் படி, பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.