சோமாலியாவில் நிலவும் சீரற்ற காலநிலையால் 100 பேர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சோமாலியாவில் நிலவும் சீரற்ற காலநிலையால் 100 பேர் உயிரிழப்பு!

சோமாலியாவில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மோசமான வானிலை காரணமாக அண்டை நாடான கென்யாவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக பதிவாகியுள்ளதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக உயிர், உடமை சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, வெள்ளத்தால் இடம்பெயர்ந்த சோமாலியர்களின் எண்ணிக்கை 700,000 ஐத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4