கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர்வெட்டு!

#SriLanka #Colombo #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர்வெட்டு!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அவசர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி கொழும்பு, தெஹிவளை - கோட்டே, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.  

எவ்வாறாயினும், அதற்கான திருத்தப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!