இஸ்ரேல் - ஹமாஸ் போர் : மோதல் தவிர்ப்பு நிலை நடைமுறையில் இருந்தாலும் தாக்குதல்கள் தொடர்கின்றன!

#SriLanka #War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேல் - ஹமாஸ் போர் : மோதல் தவிர்ப்பு நிலை நடைமுறையில் இருந்தாலும் தாக்குதல்கள் தொடர்கின்றன!

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே உடன்பாடு காணப்பட்ட நான்கு நாட்களுக்குரிய மோதல் தவிர்ப்பு நிலை இன்று (25.11) உள்ளூர் நேரப்படி காலை 7 மணிமுதல் நடைமுறையில் இருந்தாலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

வடக்கு காசா பிராந்தியத்துக்கு நுழைய முயன்ற பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் தாக்குதல் நடத்தியதால் ஒருவர் கொல்லப்பட்டு ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 வீடு திரும்ப முயன்ற மக்களை இஸ்ரேலிய துருப்புக்கள் குறிவைத்ததாக வடக்கு காசா பகுதியில் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். 

மோதல் தவிர்ப்பு நிலை நடைமுறையில் இருந்தாலும் வடக்கு காசா இன்னும் தீவிரமான போர் மண்டலமாக உள்ளதால், அந்தப் பகுதிக்கு மக்களை திரும்ப அனுமதிக்கப்போவதில்லையென இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4