சீனாவில் மீண்டும் பரவுகின்றது மற்றுமொரு புதிய நோய்! நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்

#China #Hospital #children #world_news #doctor #Virus
Mayoorikka
1 year ago
சீனாவில் மீண்டும் பரவுகின்றது மற்றுமொரு புதிய நோய்!  நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்

சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நியூமோனியா நோய் பரவி வருகிறது.

 அந்நாட்டின் பீஜிங், லியோனிங் உள்ளிட்ட மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் வைத்தியசாலைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 வட சீனாவில் பரவி வரும் நோய் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு அறிவித்துள்ளது. அந்நாட்டில் உள்ள சிறுவர்களிடையே இந்த நோய் நிலை பொதுவாக காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

images/content-image/2023/11/1700799734.jpg

 இந்த நியூமோனியா நோய் தொற்று வட சீன குழந்தைகளிடையே பரவி வருவதாகவும், அதனை சீன அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும் தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 2019ஆம் ஆண்டில், உலகின் முதல் அதிகாரப்பூர்வ கொரோனா நோயாளி சீனாவின் வுஹானில் இருந்து பதிவாகினார்.

 வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் கொரோனா வைரஸை தயாரித்ததாகவும், அது பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பில் சிறிது காலம் மூடிமறைத்ததாகவும் சீனா குற்றம் சாட்டப்பட்டது.

 மேலும் இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்த வேண்டியிருந்தது. கொரோனா ஒரு உலகளாவிய தொற்றுநோயாக பரவியுள்ளது மற்றும் அதனாலான இறப்பு எண்ணிக்கை 70 இலட்சத்தை நெருங்கியமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!