விடுதலைப்புலிகளின் பெறுமதியான பொருட்களை தேடி முல்லைத்தீவில் அகழ்வு பணி!

#SriLanka #Mullaitivu #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
விடுதலைப்புலிகளின் பெறுமதியான பொருட்களை தேடி முல்லைத்தீவில் அகழ்வு பணி!

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று(23.11) முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பான வழக்கு கடந்த 19-11-23. அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளது.

images/content-image/1700749136.jpg

முல்லைத்தீவு பொலிஸின் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில் தோண்டுவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது.

images/content-image/1700749157.jpg

இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று (23.11)  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் ஆகியோரின் பிரசன்னத்துடன்  அகழ்வு பணி இடம்பெற்று வருகின்றது.

கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போது நிலத்திலிருந்து நீர் வருவதை அவதானிக்க முடிந்துள்ளது. இருந்தும் தொடர்ச்சியாக குறித்த இடத்தினை அகழ்வு பணி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

மேலும் மற்றுமொரு கனரக இயந்திரம் கொண்டு தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. 


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!