யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்!
#SriLanka
#Jaffna
#Police
#Investigation
PriyaRam
2 years ago
யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வீதியில் உள்ள வீடொன்றின் மீதே நேற்றிரவு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டின் கதவு, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் என்பவற்றின் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

பின்னர் வீட்டின் வளவுக்குள் பெற்றோல் குண்டு ஒன்றினை வீசி விட்டுத் தப்பி சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.