காங்கோவில் இராணுவத்தினரின் கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழப்பு!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
காங்கோவில் இராணுவத்தினரின் கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழப்பு!

காங்கோ-பிரஸ்ஸாவில்லில் உள்ள மைதானத்தில் இராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. 

தலைநகர் பிரஸ்ஸாவில்லில் உள்ள மைதானத்தின் வாயில்கள் வழியாக சிலர் வலுக்கட்டாயமாக செல்ல முயன்றதால், நெரிசல் ஏற்பட்டது என்று குடியிருப்பாளர்கள் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த வாரம், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட சுமார் 1,500 பேரை பணியில் சேர்ப்பதற்கான திட்டத்தை இராணுவம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4