பெரிய அளவிலான பணய கைதிகள் பரிமாற்றத்திற்கு தயாராகிறோம் - நெதன்யாகு

#PrimeMinister #Attack #Israel #War #Hamas #Netanyahu #Hostages
Prasu
1 year ago
பெரிய அளவிலான பணய கைதிகள் பரிமாற்றத்திற்கு தயாராகிறோம் - நெதன்யாகு

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. 

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இஸ்மாயில் ஹனியே வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இஸ்ரேலுடன் ஹமாஸ் அதிகாரிகள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நெருங்கியிருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இந்த தருணத்தில், நிறைய கூறுவது சரியாக இருக்காது. விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!