EPF செலுத்தாத நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை!

#SriLanka #Workers
PriyaRam
2 years ago
EPF செலுத்தாத நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை!

சேவைத்துறையில் முறைசாரா வகையில் பணியாற்றிவருபவர்களின் எண்ணிக்கை 60 வீதம் என்றும், இவர்களை ஊழியர் சேமலாப நிதியத்தில் இணைத்துக்கொள்வதன் ஊடாக அவர்களின் சமூகப் பாதுகாப்பை உயர்த்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் நடைபெற்ற வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

images/content-image/2023/11/1700482138.jpg

ஊழியர் சேமலாப நிதியம் செலுத்தும் 80 ஆயிரம் நிறுவனங்கள் மாத்திரமே தொழில் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதற்கமைய நிறுவனங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டிய வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவுசெய்யாத அனைத்து நிறுவனங்களையும் அடையாளம் காண்பதற்கான கட்டமைப்பொன்றைத் தயாரிக்குமாறும், தொழில் அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!