பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு - பதவி துறக்கத் தயார்; ரஞ்சித் பண்டார சவால்!

#SriLanka #Parliament #Sexual Abuse #Ranjith Bandara
PriyaRam
2 years ago
பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு - பதவி துறக்கத் தயார்; ரஞ்சித் பண்டார சவால்!

கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிவித்துள்ளார்.

நாடளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தாம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் கூறியுள்ளார்.

images/content-image/2023/11/1700462823.jpg

இல்லையெனில் தன்மீது குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர் தனது சிறப்புரிமைகளை மீறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ரஞ்சித் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் சபையில் தான் இல்லாத நேரத்தில் தெரிவிக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டிட்டன் மூலம் தனது சிறப்புரிமை பாரியளவில் மீறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும், சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் உரிய குற்றச்சாட்டை ஆராயுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!