மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது! கிளிநொச்சியில் பொலிஸார்

#SriLanka #Police #Kilinochchi
Mayoorikka
2 years ago
மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது! கிளிநொச்சியில் பொலிஸார்

மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், அவர்களின் அடையாளர்கள் எவற்றையும் பயன்படுத்தக் கூடாது என கிளிநொச்சி பொலிஸார் அறிவுறுத்தியதாக தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தெரிவித்துள்ளார்.

 நேற்றைய தினம் ​(19) ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தானும் தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளரமான ச. கீதனும் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்த அவர்,

 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய சின்னங்கள் எவையும் பயன்படுத்தக் கூடாது என பொலிஸார் தெரிவித்ததாகவும் குறிப்பாக கார்த்தினை பூவை கூட பயன்படுத்தக் கூடாது என்றும் தமக்கு தெரிவிக்கப்பட்டது. 

ஆனாலும் தாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நகுலன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!