காசாவில் 2 பாடசாலைகள் மீதான தாக்குதலில் 80 பேர் பலி

#Death #School #Attack #Israel #War #Hamas #Gaza
Prasu
2 years ago
காசாவில் 2 பாடசாலைகள் மீதான தாக்குதலில் 80 பேர் பலி

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி, இஸ்ரேலின் தாக்குதலில் நிர்மூலமாகி இருக்கிறது. காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மேலும் வடக்கு காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.

இந்த நிலையில் இரண்டு பள்ளிகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பள்ளியில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். 

இந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 50 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதே போல் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4