தெற்கு காஸாவை விட்டு வெளியேற பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

#people #Israel #War #Warning #Palestine #Hamas #Gaza #leave
Prasu
2 years ago
தெற்கு காஸாவை விட்டு வெளியேற பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

முக்கிய நகரைவிட்டு வெளியேறும்படி பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு காஸாவிலுள்ள கான் யூனிஸ் நகரிலிருந்து வெளியேறி, மேற்குப் பகுதிக்குச் செல்லும்படி பாலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு காஸாவிலும் ஹமாஸ் படையினர்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதைக் காட்டுவதாகவே இது அமைந்துள்ளது. “மக்களை வேறிடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறோம். பலருக்கும் இது எளிதானதாக இருக்காது என்று தெரியும். 

ஆனாலும், சண்டையில் அப்பாவி மக்கள் சிக்கிக்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை,” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகின் உதவியாளரான மார்க் ரெகெவ் கூறினார். இதனால், இஸ்ரேல் தாக்குதலால் ஏற்கெனவே தென்பகுதிக்கு இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோர் மீண்டும் இடம்பெயரும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 அந்நகரில் வசிப்போர் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு நேற்று முன்தினம் இஸ்ரேல் தெரிவித்திருந்தது. அத்துடன், மேற்குப் பகுதிக்கு இடம்பெயரும் பொதுமக்கள் மீண்டும் இடம்பெயரத் தேவையிருக்காது என்று உறுதியளிப்பதாகவும் தெரிவிக்கப்டுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4