கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய 4 தொழிலாளர்கள் மரணம்

#India #Death #migrants #Tamilnews #Gujarat #Workers
Prasu
2 years ago
கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய 4 தொழிலாளர்கள் மரணம்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய 4 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை பிஹாரைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் சூரத் நகரின் பால்சனா பகுதியில் உள்ள ஒரு சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

2 தொழிலாளர்கள் தொட்டிக்கு உள்ளே இறங்கியபோது மயக்கமடைந்துள்ளனர். . அவர்களை காப்பாற்றும் முயற்சில் மற்ற இரு தொழிலாளர்களும் மயங்கி தொட்டிக்கு உள்ளேயே விழுந்துள்ளனர்.

4 பேரும் தொட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 4 பேருமே ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவர்களைப் பரிசோதன செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த இந்த அவலம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4