யாழ்ப்பாணத்தில் பிட்டு சாப்பிட்டதால் இளைஞனுக்கு நேர்ந்த கதி

#SriLanka #Jaffna #Death #Hospital #Food #sri lanka tamil news
Prasu
2 years ago
யாழ்ப்பாணத்தில் பிட்டு சாப்பிட்டதால் இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் பிட்டு சாப்பிடும்போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டில் பிட்டு சாப்பிட்ட போது , அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறியபோது , வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர். 

சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து , இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

 அதனை தொடர்ந்து நடைபெற்ற உடற்கூற்று பரிசோதனையில், சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டதை அடுத்து, சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!