சீனாவில் கட்டடம் ஒன்றில் தீவிபத்து : 26 பேர் உயிரிழப்பு!

#SriLanka #China #world_news #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சீனாவில் கட்டடம் ஒன்றில் தீவிபத்து : 26 பேர் உயிரிழப்பு!

வடக்கு சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

அத்துடன்  டஜன் கணக்கானவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி காலை 6:50 மணியளவில்  ஷாங்க்சி மாகாணத்தின் லூலியாங் நகரில் உள்ள யோங்ஜு நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமான நான்கு மாடி கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 63 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து அறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றரனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!