ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலி

#India #Death #Accident #Bus #Tamilnews #Rescue #Passenger
Prasu
2 years ago
ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் தோடா பகுதியில் உள்ள பள்ளத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 33 பேர் உயிரிழந்துள்ளனர். கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு காஷ்மீர் நோக்கிச் சென்ற குறித்த பேருந்து தோடா மாவட்டத்தில் உள்ள அசார் பகுதியிலுள்ள பள்ளத் தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 குறித்த பகுதிக்கு மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4