நாடளாவிய ரீதியில் பல கொள்வனவு நிலையங்களில் 22 கோடி அபராதம் அறவீடு!

#SriLanka #money #shop
Mayoorikka
2 years ago
நாடளாவிய ரீதியில் பல கொள்வனவு நிலையங்களில்  22 கோடி அபராதம் அறவீடு!

நாடளாவிய ரீதியில் பல கடைகள் மற்றும் பொருள் கொள்வனவு நிலையங்களில் இந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

 அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதத்திற்கு இடையில் இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 நாடு முழுவதும் சுமார் 22,000 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு அவற்றில் 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 நேற்று (15 புதன்கிழமை) மாத்திரம் பொலன்னறுவை மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்புக்களின் மூலம் 04 இலட்சம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.

 எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!