சீன ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி இடையே பேச்சுவார்த்தை

#China #Meeting #America #world_news #President #Biden
Prasu
2 years ago
சீன ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி இடையே பேச்சுவார்த்தை

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு சென்றார். 

சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்றடைந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜி ஜின்பிங், உச்சி மாநாட்டுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அமெரிக்கா- சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இரு தலைவர்கள் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 அவர்களின் சந்திப்பின்போது ரஷியா- உக்ரைன் போர், வடகொரியா, தைவான் விவகாரம், வர்த்தகம், பொருளாதாரம், ராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4