வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு எதிரணியினருக்கு சிறந்த வாய்ப்பு இதுவே!

#SriLanka #Ranil wickremesinghe #Namal Rajapaksha #budget
PriyaRam
2 years ago
வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்கு எதிரணியினருக்கு சிறந்த வாய்ப்பு இதுவே!

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு - செலவுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆனால், வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி அதனை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

images/content-image/2023/11/1700034897.jpg

“எதிர்க்கட்சிகள் வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் வரவு - செலவுத் திட்டத்தை விமர்சிப்பது அர்த்தமில்லை. 

ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்துவதால் கொழும்புக்கு நிவாரணம் கிடைத்திருக்கலாம்.

எவ்வாறாயினும், இந்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் உள்ள பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், முன்னைய வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக இருந்தமையால் அதனை எதிர்க்க முடியவில்லை.

ஆனால், கடந்த வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் அவற்றை சமர்பிப்பது நியாயமானதா என்பதில் சிக்கல் இருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!