அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைக் குடும்பம் மீது கொடூரத் தாக்குதல்!

#SriLanka #Police #Australia #Investigation #Attack
PriyaRam
2 years ago
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைக் குடும்பம் மீது கொடூரத் தாக்குதல்!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று, குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசித மற்றும் அவரது மனைவி நிலந்தி ஆகியோரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். 

தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய மகளும் இருந்துள்ளதுடன், இந்த தாக்குதலின் பின்னர் குறித்த சிறுமி அதிர்ச்சியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்லாரட் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்கு எதிராக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டுள்ள துசித குற்றஞ்சாட்டியுளளார்.

images/content-image/2023/11/1699958983.jpg

தாக்குதல் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கவில்லை என பொலிஸ் அதிகாரிகள் துசிதவுக்கு கூறியுள்ளனர். 

சுமார் 10 வருடங்களாக மெல்போர்னில் வசிப்பதாகவும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், துசித மேலும் கூறியுள்ளார். 

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக பல்லாரட் நகரசபை மேயர் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதோடு, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4