இஸ்ரேலுக்கு எதிரான கண்டன தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

#India #world_news #UN #Israel #War #Gaza #condemn
Prasu
2 years ago
இஸ்ரேலுக்கு எதிரான கண்டன தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி கூறியுள்ள இஸ்ரேல் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

காசா பகுதியில் பெரும்பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஆக்ரமித்து குடியமர்வை செயல்படுத்த முயல்வதாக சில உலக நாடுகள் குற்றம் சாட்டி வந்தன.

images/content-image/1699806653.jpg

இதை தொடர்ந்து ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கிழக்கு ஜெருசலேம் மற்றும் சிரியாவின் கோலன் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை, இந்த தீர்மானம் கண்டனம் செய்தது. தீர்மானத்தை ஆதரித்த 145 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த கண்டன தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது.

அமெரிக்கா, கனடா, ஹங்கேரி, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா மற்றும் நவ்ரு உட்பட 7 நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். 18 உறுப்பினர் நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

images/content-image/1699806667.jpg

காசாவில் அமைதி ஏற்பட வேண்டும் என சில தினங்களுக்கு முன்பாக ஐ.நா. சபையில் ஜோர்டான் கொண்டு வந்திருந்த ஒரு தீர்மானத்தை இந்தியா ஏற்று கொள்ளாததால் கலந்து கொள்ளவில்லை. ஹமாஸ் அமைப்பினரின் பயங்கரவாத செயல்களை அத்தீர்மானம் கண்டிக்கவில்லை என இந்தியா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4