காஸா மோதல்களுக்கு எதிரான நடவடிக்கை தேவை : ஈரான் அதிபர் கருத்து!

#SriLanka #world_news #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
காஸா மோதல்களுக்கு எதிரான நடவடிக்கை தேவை : ஈரான் அதிபர் கருத்து!

காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் மோதல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.  

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் பதில் கூறாமல், நடவடிக்கைகளால் பதிலளிக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சவூதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் அரபு நாட்டு தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தெஹ்ரான் விமான நிலையத்தை வந்தடைந்த போது ஈரான் ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4