புலத்சிங்கள பகுதியில் மயங்கி விழுந்த மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
புலத்சிங்கள பகுதியில் மயங்கி விழுந்த மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

புலத்சிங்கள, கோபவக, கோவின்ன பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இன்று (09.11) துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். 

இன்று காலை பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

புலத்சிங்கள, கோபவக, கோவின்ன பகுதியைச் சேர்ந்த ஹொரண வித்யாரத்ன வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பிரபுத்த பிரபாஸ்வர என்ற பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து நடந்து சென்ற மாணவன், சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து சென்றபோது சாலையில் மயங்கி விழுந்துள்ளார். 

பின்னர், மாணவி உடனடியாக ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!