பணயக்கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் : ஹமாஸ் அறிவிப்பு!

#SriLanka #War #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
பணயக்கைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் : ஹமாஸ் அறிவிப்பு!

காஸா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பணயக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

சுமார் 240 பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளது. இதேவேளை இஸ்ரேலில் பொதுமக்களை தமது அமைப்பினர் கொல்லவில்லை எனவும் தலைவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதற்கிடையே காஸா பகுதியின் தலைநகரான காஸா சிட்டியை சுற்றுவளைத்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.  இது குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹாகரி செய்தியாளா்களிடம் கூறுகையில், காஸா சிட்டியை அனைத்து திசைகளிலும் இஸ்ரேல் ராணுவம் முழுவதுமாக சுற்றிவளைத்துள்ளது.

நகரைச் சுற்றிலும் இஸ்ரேல் படையினரின் உள்ளதால் காஸாவின் தெற்குப் பகுதியும், வடக்குப் பகுதியும் 2-ஆகப் பிரிக்கப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!