இத்தாலியில் ஏற்பட்ட வெள்ளத்தால் 6 பேர் பலி

#Death #Hospital #world_news #Flood #Italy #Rescue
Prasu
2 years ago
இத்தாலியில் ஏற்பட்ட வெள்ளத்தால்  6 பேர் பலி

இத்தாலி டஸ்கனி நகரில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டியது. இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

சில இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகள் முன் நிறுத்தி வைத்து இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது. 

இதனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் தரை தளத்தில் வசித்து வருபவர்கள் மேல் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி விட்டனர். 2 பேரை காணவில்லை. இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சாலைகளிலும் வெள்ளம் ஆறு போல ஓடுகிறது.

இத்தாலியில் வரலாற்று நகரமான புளோரன்ஸ் அருகே உள்ள கேம்பி பிசென்சியோவில் 190 குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 தற்போது அங்கு நிலைமை மோசமாக உள்ளதால் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இத்தாலியில் கடந்த 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாள் இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4