வடக்கு நைஜீரியாவில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் : 37 பேர் பலி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வடக்கு நைஜீரியாவில் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் : 37 பேர் பலி!

வடக்கு நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்  கிழமைகளில் யோபே மாநிலத்தின் கெய்டாம் மாவட்டத்தில் கிராம மக்களை குறிவைத்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

மாநிலத்தில் நடத்தப்பட்ட முதல் தாக்குதலில் 20 பேர் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்களை அடக்கம் செய்ய சென்றப்போது கண்ணிவெடியை வெடிக்கச் செய்து மற்றுமோர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாவது தாக்குதலில் 17 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4