சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

#celebration #2023 #Tamilnews #ImportantNews #NarendraModi
Mani
2 years ago
சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

துண்டுபட்டு கிடந்த ராஜ்ஜியங்களை இணைத்த பெருமைக்குரியவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல். அவரது பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, மத்திய மந்திரி மீனாட்சி லேகி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நர்மதா நதிக்கரையில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார். ஒற்றுமையை வலியுறுத்தும் உலகிலேயே மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலை நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4