கேரள குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

#India #Death #BombBlast #2023 #Breakingnews #Kerala #Died #ImportantNews #Bomb
Mani
2 years ago
கேரள குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

கேரளாவில் களமசேரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது திடீரென கூட்டத்தில் 3 முறை குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 52 பேர் படுகாயம், அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடம்; 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 3 பேர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு தொடர்பாக டொமினிக் மார்ட்டின் என்பவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கேரளா மாநில அரசும் 20 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வு குழுவை விசாரணைக்காக அமைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அவதூறு பரப்பும் வகையில் பேசும் ஒன்றிய அமைச்சர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4