ஜப்பானில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 16 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி!

#SriLanka #Arrest #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜப்பானில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 16 மில்லியனுக்கும் அதிகமான பணம் மோசடி!

ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 16 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான  பணத்தை மோசடி செய்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பில்  குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில், இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

விசாரணையில்  இம்புல்கொட மற்றும் ஹல்மில்லவெவ பிரதேசத்தை சேர்ந்த   35 மற்றும் 57 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!