மாணவனுக்கு நிர்வாண படங்களை அனுப்பிய பெண் ஆசிரியை கைது

#Arrest #Student #Women #America #world_news #Sexual Abuse #Teacher
Prasu
2 years ago
மாணவனுக்கு நிர்வாண படங்களை அனுப்பிய பெண் ஆசிரியை கைது

அமெரிக்காவின் மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிக்கி லின் லாப்லின் (வயது23). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர், 16 வயது மாணவனுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார். மேலும் மாணவனின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டு உள்ளார். 

இவ்விவகாரம் பள்ளி முழுவதும் பரவியது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியை தனக்கு அவரது நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பியதாகவும், ஆசிரியையிடம் தனது நிர்வாண படங்களை பரிமாறி கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஆசிரியையிடம் விசாரணை நடத்திய போது மாணவனுக்கு நிர்வாண படங்களை அனுப்பியதை ஒப்புக் கொண்டார். மேலும் அந்த மாணவன் மைனர் என்பது தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.

 இதையடுத்து ஆசிரியையை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு முயற்சி, குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருத்தல், சாட்சியை சேதப்படுத்துதல், சிறுவர்களுக்கு ஆபாச தகவல்களை அளித்தல் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4