விசா சேவைகள் மீண்டும் தொடக்கம்; இந்தியாவின் முடிவுக்கு கனடா வரவேற்பு

#India #Flight #Canada #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews #Visa
Mani
2 years ago
விசா சேவைகள் மீண்டும் தொடக்கம்; இந்தியாவின் முடிவுக்கு கனடா வரவேற்பு

காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலைக்கு பின்னால் இந்தியா இருப்பதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டிப் பேசினாா். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. எனினும், கனடாவில் உள்ள இந்திய தூதரக உயரதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்தியாவும் அதேபோன்ற பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து, கனடா-இந்தியா இடையிலான ராஜீய உறவுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. கனடாவில் இருந்து இந்தியா வருபவா்களுக்கான அனைத்து வகை விசா வழங்குவதையும் இந்தியா அறிவித்தது. இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் 41 போ் அண்மையில் வெளியேற்றப்பட்டனா்.

இந்நிலையில், கனடாவைச் சோ்ந்தவா்களுக்கு சில குறிப்பிட்ட பிரிவுகளில் விசா வழங்குவதை சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு இந்தியா வியாழக்கிழமை (அக். 26) மீண்டும் தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக கனடா குடியேற்றத் துறை அமைச்சா் மாா்க் மில்லா் கூறுகையில், ‘இந்தியாவின் நடவடிக்கை இரு நாட்டு உறவை மேம்படுத்துவதில் நல்லதொரு அறிகுறியாக உள்ளது. இந்தியாவுடன் ராஜீய உறவுகள் பாதிக்கப்பட்டது மிகவும் கவலையளிக்கும் விஷயமாக இருந்தது’ என்றாா்.

கனடாவைச் சோ்ந்த அமைச்சரும், சீக்கியருமான ஹா்ஜித் சஜ்ஜன் இது தொடா்பாக பேசுகையில், ‘இது நல்ல செய்திதான். திருமணம், இறுதிச் சடங்குகள் போன்ற நிகழ்வுகளுக்காக இந்தியா வரும் கனடா நாட்டவருக்கும் விசா வழங்க வேண்டும். காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விசாரணையில் இந்தியாவின் உதவியை தொடா்ந்து எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

தொழில், மருத்துவம், மாநாடு, கருத்தரங்குகளில் பங்கேற்பது போன்ற காரணங்களுக்காக இந்தியாவுக்கு பயணிப்பதற்கு மட்டும் இப்போது கனடாவைச் சோ்ந்தவா்களுக்கு விசா வழங்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4