பிலிப்பைன்ஸில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு

#India #world_news #Attack #Phillipines #HeavyRain #2023 #Breakingnews #Mountain
Mani
2 years ago
பிலிப்பைன்ஸில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் கர்ப்பிணி பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் கியூசான் மாகாணம் பரங்கி உமிரேயில் உள்ள சிட்டியோ ஏஞ்சலோவில் பருவநிலை மாற்றம் காரணமாக தொடர் மழை கொட்டி தீர்த்து வருகிறது. பேய் மழையால் நீர்நிலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மலைபாங்கான பகுதியான அங்கு சிறு சிறு சுரங்கங்கள் தோண்டப்பட்டு உள்ளூர் மக்கள் தங்கத்தை வெட்டி எடுத்து வருகிறார்கள்.

கனமழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள சுரங்கங்கள் திடீரென இடிந்து விழுந்து பெரும் சேதத்தை சந்தித்தன. மேலும், நிலச்சரிவு காரணமாக மலை அடிவாரத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

இந்த திடீர் பேரழிவு காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலர் மண்ணிற்குள் புதைந்தனர். தகவல் கிடைத்ததும் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் களத்தில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிருடன் புதைந்த கர்ப்பிணி பெண் உள்பட 4 பேரின் உடல்களை தோண்டி எடுத்தனர். மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4