அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரில் துப்பாக்கிச்சூடு : 22 பேர் உயிரிழப்பு!

#world_news #Lanka4 #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரில் துப்பாக்கிச்சூடு : 22 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின்  மைனேயின் லூயிஸ்டன் நகரில் நேற்று (25.10) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாக சட்ட அமலாக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

50-60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு காரணமாக எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த துப்பாக்கிச்சூடு எதனால் நடத்தப்பட்டு, எத்தனை இடங்களில் நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியாகாத நிலையில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய புகைப்படத்தை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

மேலும் வணிக வளாகங்களை மூடுமாறும், தாக்குதல்தாரியை கண்டுப்பிடிக்க உதவி செய்யுமாறும் பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4