'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது
#India
#Cinema
#Actor
#Actress
#TamilCinema
#2023
#Tamilnews
Mani
2 years ago
விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில் 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தற்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.