வெளிநாட்டினரின் பிரித்தானிய விசாக்கள் இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெளிநாட்டினரின் பிரித்தானிய விசாக்கள் இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை!

இஸ்ரேல் மீதான ஹமாஸ் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து யூத-விரோத நடத்தை அல்லது கருத்துக்களுக்காக குறிப்பிட்ட வெளிநாட்டினரின் பிரித்தானிய விசாக்கள் ரத்து செய்யப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 யூத-விரோத நடத்தை காரணமாக அவர்கள் பிரித்தானியாவில் தங்குவதற்கான விசாவை ரத்து செய்ய அரசாங்கம் விரும்புவதாக உள்துறை அலுவலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

 இஸ்ரேல்-ஹமாஸ் மோதலைத் தொடர்ந்து யூத எதிர்ப்புக்காக அடையாளம் காணும் வெளிநாட்டினரின் பெயர்களை அனுப்புமாறு யூத சமூகங்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளையைகேட்டு கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4